Jada Muni History in Tamil
ஜடா முனீஸ்வரர் வரலாறு
Muneeswaran
முனீஸ்வரன் வழிபாடு என்பது காலம் காலமாக கிராம மக்கள் மட்டுமல்லாது நகரத்து மக்களும் பயபக்தியுடன் வணங்கக்கூடிய தெய்வ வழிபாடாகும். சுமார் 300 ஆண்டுக்கு முன்பிருந்தே நாம் முனீஸ்வரரை வழிபட்டு வருகிறோம். வீரமும், ஆவேசமும் நிறைந்த ஆண் தெய்வமாக, முனீஸ்வரர் கருதப்படுகிறார். முற்காலத்தில், ஒரு கிராமத்தையே இரவில் கொள்ளையர்களிடம் இருந்து காப்பவராக முனீஸ்வரர் இருந்துள்ளார்.Jada Muni / ஜடா முனி
ஜடா முனி - நாதமுனி, வேதமுனி, பூதமுனி, சக்திமுனி, மாயமுனி, மந்திரமுனி, பால்முனி, கருமுனி, சுடலைமுனி என்று பல்வேறு வகையாக முனீஸ்வரன் அழைக்கப்படுகிறார்.ஜடாமுனி சிவனுடைய அம்சம் நிறைந்தவர். அதாவது சுடுகாட்டு சாம்பலை உடம்பெல்லாம் பூசிக்கொண்டு, பாம்பைக் கழுத்தில் ஆபரணமாக அணிந்து, கையில் பலவிதமான ஆயுதங்களைக் கொண்டு அகோர ரூபத்தில் காட்சிதந்து, பக்தர்களுக்கு அருள்பாலிப்பவர் இந்த ஜடாமுனி. சிவபெருமானின் முழு அம்சம் பொருந்திய ஜடாமுனி, தன் காலினால் எமனின் உயிரையே வீழ்த்தும் அளவுக்கு அற்புத சக்திகள் நிறைந்தவர்.
எல்லாவிதமான தெய்வங்களும் இந்த ஜடாமுனிக்கு அடங்கும். எல்லா தெய்வங்களையும் ஜடா முனி கட்டுப்படுத்த முடியும். சடையுடன் கூடிய (தலைவிரி கோலமாக) இருக்கும் ஜடாமுனியை வணங்குவதால் நம்முடைய எல்லாவிதமான எதிரிகளும் ஒழிந்து விடுவர். தீமைகள் விலகும், வறுமை நீங்கும், பில்லி ஏவல் சூனியம் விலகும், எதிரிகள் செய்யும் கெடுதல்கள் விலகும், அனைத்து நன்மைகளையும் ஏற்படுத்தும் சக்தி படைத்தவர் இந்த ஜடாமுனி.
ஜடாமுனியின் முக்கிய அம்சமாக கருதப்படுவது, தண்ணீரில் தவம் இருக்கக் கூடிய சக்தி படைத்தவர் மேலும் எப்போதும் தவக்கோலத்தில் இருப்பார். இப்படி இருக்கும் ஜடா முனியை வழிபடுவதால் நமக்கு வேண்டிய பலன்கள் உடனே கிடைக்கும் என்பது ஐதீகம்.
Muneeswaran Pooja Details / முனீஸ்வரன் வழிபாடு
தோஷங்கள் விலகுவதற்கு ஜடாமுனிக்கு வடை, பால், பாயாசம், சுருட்டு, கொழுக்கட்டை, இறைச்சி, அவல், பொரி, கடலை இவற்றை வைத்து படையல் செய்து வழிபடுவதால் அனைத்து தோஷங்களும் நிவர்த்தியாகும்.இதனால்தான் அனைத்து கிராமப்புறங்களிலும் ஜடாமுனி, பல்வேறு விதமான முனீஸ்வரன் பெயர்களில் வைத்து பூஜிக்கப்படுகிறார். எப்படிப்பட்ட தீர்க்கமுடியாத பிரச்சனையாக இருந்தாலும், ஜடாமுனியின் அருளைக் கொண்டு அனைத்து தீய சக்திகளையும் வீழ்த்தி விடலாம். எந்த ஒரு தீய சக்தியையும் அழித்து நல்வழிப்படுத்தக் கூடிய அருள் கொண்டவர் இந்த ஜடாமுனீஸ்வரர்.
ஜடாமுனி - மாய ஜடாமுனி, ஜல ஜடாமுனி, மலை ஜடாமுனி, குகை ஜடாமுனி, வன ஜடாமுனி என அனைத்து அவதாரங்களிலும் அருள்புரிகிறார்.
7 Muneeswaran Name / சப்த முனி
- Mutaiyar Muni / முத்தையர் முனி (முத்துமுனி)
- Chinna Mutaiyar Muni / சின்ன முத்தையர் முனி (சின்ன முத்துமுனி)
- Nondi Muni / நொண்டி முனி
- Jada Muni / ஜடாமுனி
- Poo Muni / பூ முனி
- Sem Muni / செம்முனி
- Vaal Muni / வாள் முனி
- பால் முனீஸ்வரரை வழிபட்டால் குடும்பத்தில் பால் பொங்கும், எல்லா காரியத்திலும் வெற்றி கிட்டும்.
- செம்முனியை வழிபட்டால் குடும்பத்தில் லட்சுமி கடாட்சம் பெருகும், செல்வச் செழிப்பு ஏற்படும்.
- கருமுனியை வழிபட்டால் குடும்பத்திலுள்ள எல்லா தோஷங்களும் விலகி, கருவைக் காத்து தீமைகள் விலகும்.
- அதேபோல் இந்த ஜடாமுனியை வழிபட்டால் அனைத்து எதிரிகள் தொல்லைகள் நீங்கும், சங்கடங்கள் விலகி சகல சௌபாக்கியம் ஏற்படும்.
Comments
Post a Comment