Father of Lord Shiva / சிவபெருமானின் தந்தை, பாட்டன் மற்றும் முப்பாட்டன்
மும்மூர்த்திகளில் ஒருவரான சிவனின் தெய்வீக சக்திகளைப் பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்.
சிவபெருமானின் சக்தியை உணர்த்தும் வகையில் பல்வேறு கதைகள், புராண ஆதாரங்கள் உள்ளன. அவற்றில் முக்கியமான புராணக்கதை இதோ:
இவரது மனைவி பார்வதி (சக்தி), பிள்ளைகள் - விநாயகனும், முருகனும் என தெரியும், ஆனால் சிவனுக்கே தந்தை யார் என முனி ஒருவர் வினவிய கதையும் உண்டு.
முனி ஒருவர் சிவனிடம் உங்களது தந்தை யார் என கேட்டாராம், இதற்கு படைக்கும் தொழிலை கொண்ட பிரம்மா தான் தந்தை என்றும், விஷ்ணு தான் பாட்டன் என்றும் கூறினாராம்.
முப்பாட்டன் யார் என்று கேட்கும் போது நான்தான் (சிவன்) அனைத்திற்கும் மூலதனம் என தெரிவித்தாராம்.
சிவன் "Anaadi" எனக் கருதப்படுகிறார், அதாவது உலகின் தொடக்கமும், முடிவும் அவரே என்று பொருள். ஜனனம் மற்றும் மரணத்திற்கு அப்பாற்பட்டு வாழ்கின்றனர் எனக் கூறலாம்.
சிவபெருமான் ஈசன் என்றும் அழைக்கப்படுகிறார். அவர் எல்லாத் தத்துவங்களையும் கடந்தவர் மற்றும் ஐந்தொழில்களையும் பின்பற்றி ஆன்மாக்களுக்கு பரிபூரண அருளை அளிப்பவர்.
ஆகவே சிவனை வணங்கி, அவருக்கான விரதங்களைப் பின்பற்றி (சிவ விரதம்) நாமும் ஈசனின் அருளைப் பெறுவோமாக..
Comments
Post a Comment