Glory of Kamakshi Amman Temple Sthala Vriksha / காஞ்சி காமாட்சி அம்மன் கோவில் தலவிருட்சத்தின் மகிமை
காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் தலவிருட்சமாக மாமரம் ஒன்று பன்னெடுங்காலமாக இருக்கிறது.காஞ்சி திரு ஏகாம்பரநாதர் திருக்கோவிலில் 3500 ஆண்டுகாலமாக இருந்த தலவிருட்சத்தின் திசுவிலிருந்து வேளாண் அறிஞர்கள் உருவாக்கிய புதிய மாஞ்செடியே காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில் உள்ளது.
அதன் இலைகள் எல்லாமே மருத்துவ குணம் கொண்டவை. இந்த ஒரே மரத்தில் பல விதமான சுவைகளைக் கொண்ட கனிகள் காய்க்கும். பெரியவர்கள் சிலர் ருசித்தும், சிலர் சொல்லியும் கேட்டிருக்கிறோம்.
தற்போதும் அந்த மரம் இருக்கிறது. முன்பு கொஞ்சம் பின்னமாகி இருந்தது. தற்போது அதை உயிர்ப்பித்து புதுப்பித்திருக்கிறார்கள்.
அந்த தலவிருட்சத்திற்கு நிறைய சக்திகள் மற்றும் மருத்துவ குணங்கள் இருக்கிறது.
காஞ்சி காமாட்சி கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் சற்று இந்த மாமர நிழலில் அமர்ந்து செல்வது வழக்கம்.
நாமும் நேரம் கிடைக்கும் பொழுது காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலுக்குச் சென்று, தலவிருட்சத்தின் நிழலில் அமர்ந்து ஆன்மீக தியானத்தின் மூலம் மனஅமைதி பெறுவோமாக!
குறிக்கோள் இல்லாத வாழ்க்கை
துடுப்பு இல்லாத படகைப் போன்றது!
Comments
Post a Comment