தமிழ்நாட்டில் மாணிக்கவாசகர் கோயில்கள் உள்ள இடங்கள்
திருவாசகம் பாடிய மாணிக்க வாசகர், சிவன் கோயில்களில் தேவாரம் பாடிய மூவருடன் இருப்பார். இவருக்கு தனி சன்னதி சில கோயில்களில் உள்ளன. கீழ்க்கண்ட இடங்களில் நாம் மாணிக்கவாசகரை தரிசிக்கலாம்.
1. புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஆத்மநாதர் கோயில். இந்த இடத்தில்தான் மாணிக்கவாசகருக்கு சிவன் குருவாக இருந்து உபதேசித்ததாக கூறுவர்.
2. மதுரை மாவட்டம் திருவாதவூர் தலம். இங்குதான் மாணிக்கவாசகர் அவதரித்ததாக கூறுவர்.
3. தேனி மாவட்டம் சின்னமனுார். இங்கு மாணிக்கவாசகரே மூலவர். சிவன் மற்றும் அம்பிகை பரிவார மூர்த்திகளாக உள்ளனர்.
4. ராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கை மங்களநாதர் கோயில். இங்கு சிவபெருமானே மாணிக்கவாசகருக்கு ஆகமங்களை உபதேசித்த தலம்.
5. கடலுார் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயில். மாணிக்கவாசகர் சொல்லச் சொல்ல சிவனே, திருவாசகத்தை எழுதிய தலம். மாணிக்கவாசகர் சிவனுடன் ஐக்கியமாகிய தலம். தில்லைக்காளி கோயில் அருகில் தனி சன்னதி உள்ளது.
Comments
Post a Comment