Betel Leaf Benefits & Why Do We Offer to God? – Aanmeegam

Why do we offer betel leaves to God? / இறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்?

வெற்றிலை பாக்கு மருத்துவ குணம் நிறைந்தது. மகிமை மிக்கதும் மங்களகரமானதுமான வெற்றிலை - வெற்றியின் அடையாளமாகவே கருதப்படுகிறது. மருத்துவகுணமிக்க இந்த வெற்றிலையை நாம் எதற்காக இறைவனுக்குப் படைக்கிறோம் என்று பார்ப்போம்.

Betel Leaf Benefits

☸ அபூர்வம் நிறைந்த வெற்றிலை பாக்கை இறைவனுக்கு வைத்து படைக்கும் போது நமது பிரார்த்தனை முழுமையாக இறைவனை சென்றடையும் என்பது ஐதீகம்.

 இதனை தாம்பூலம் என்றும் அழைப்பர். தாம்பூலத்தின் பின்பக்க இடதுபுறம் மற்றும் தாம்பூல மத்திய பாகம் இவை இரண்டும் சிவபெருமனை குறிக்கும்.

 வெளிப்பக்கம் (உள்) வெற்றிலையின் மத்திய பாகம் சந்திரனை குறிக்கும். தாம்பூலத்தின் நுனியில் லட்சுமியும், நடுவில் சரஸ்வதியும், காம்பில் பார்வதிதேவியும் இருப்பதாக ஐதீகம்.

Betel Leaf Benefits

 இறைவனுக்கு எத்தனை பதார்த்தங்களை நிவேதனம் செய்தாலும் வெற்றிலை பாக்கு வைக்காவிட்டால் அந்நிவேதனம் முற்றுப்பெறுவதில்லை.

 பூஜை மற்றும் திருமணம் ஆகியவற்றின் போதும் அவை சுபமாக நடந்தேற வேண்டும் என்பதற்காக வெற்றிலை பாக்கு படைக்கப்படுகிறது.

 வெற்றிலையும் பாக்கும் மகாலட்சுமியின் அம்சங்களாகும். விருந்தினர்களுக்கு சுபநிகழ்ச்சியின்போது வெற்றிலையும் பாக்கும் கொடுத்தால் குடும்பம் செழித்தோங்கும் என்பது நம்பிக்கை.

 வெற்றிலையை வாட விடக்கூடாது. அப்படி வாடவிடுவது வீட்டுக்கு சுபமல்ல. வெற்றிலை பாக்கை எப்போதும் வலதுகையால் தான் வாங்கவேண்டும்.


செயல்பாடுகளில் அலட்சியம் தடையாகும்!
முயற்சியில் முழு ஈடுபாடு வெற்றியாகும்!

Comments