Mahamaham / Masi Magam (மாசி மகம்) - Aanmeegam

Mahamaham / மாசி மகம்

தென்னிந்தியாவின் கும்பமேளா என்றழைக்கப்படும் மகாமகம் / மாசி மகத் திருவிழா மாசி மாதத்தில் பௌர்ணமியுடன் சேர்ந்து வரும் மகம் நட்சத்திரம் (குரு சிம்மராசியில் இருக்கும் போது) வரும் நாள் மகாமகம் அல்லது மாசிமகம் என்றழைக்கப்படுகிறது.

Mahamaham in Tamil
இந்த மாசிமகத் திருவிழா உலகில் வாழும் தமிழர்கள் அனைவராலும் கொண்டாடப்படுகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் கும்பேசுவரர் கோயிலில் ஆண்டுதோறும் பெரு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. வருடாவருடம் நடக்கும் மகாமகத் திருவிழாவில் - கும்பகோணத்தில் மட்டும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். அதுவே பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் மாசிமகத் திருவிழாவில் ஏறக்குறைய 20 லட்சம் பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.

Masi Magham Viratham

மாசி மகத்தின் போது கடலாடும் விழாவானது பெரும்பாலான பக்தர்களால் கடைபிடிக்கப்படுகிறது. அதாவது பிறவிப் பெருங்கடலில் வீழ்ந்த பக்தர்களின் ஆன்மாவை இறைவனின் அருட்கடலில் மூழ்கி திளைக்கச் செய்தலே கடலாடும் விழாவாகும். கடலாடும் விழா கடல்களிலும் புண்ணிய ஸ்தலங்களில் உள்ள தீர்த்தக் குளங்களிலும் பக்தர்கள் நீராடுவர். தீர்த்த கடலாடும் முடியாத பக்தர்கள் வீட்டிலேயே விரதமிருந்து அருகில் உள்ள கோவிலுக்கு சென்று இறைவனை வழிபாடு செய்வர்.

Mahamaham Tank

Mahamaham Mythical Events / மாசிமகம் புராண நிகழ்வுகள்

  • ஒருமுறை பிரம்மஹத்தி தோஷம் வருண பகவானை பிடித்திருந்தது. அப்பொழுது அவரை பிரம்மகத்தி கடலுக்கடியில் ஒளித்து வைத்திருந்தது.  இந்த சமயத்தில் வருண பகவான் சிவபெருமானை காப்பாற்றும்படி வேண்டினான்; சிவபெருமானும் வேண்டுதலுக்கிணங்க வருணனை காப்பாற்றினார். வருணபகவான் காப்பாற்றப்பட்ட நாளே மாசி மகம் என்றழைக்கப்படுகிறது.

  • கந்தபுராணத்தில் முகத்தைப் பற்றி விரிவாகக் கூறப்படுகிறது: சிவபெருமானின் திருவிளையாடல்களில் ஒன்றான சக்தி இல்லையேல் சிவமில்லை சிவமில்லையேல் சக்தியில்லை வாக்குவாதத்தினால் உலகம் இயக்கமின்றி போனது. பார்வதி தேவி, தான் செய்த தவறை உணர்ந்து யமுனை நதியில் வலம்புரிச் சங்கு வடிவில் தவம் மேற்கொண்டிருந்தார். ஒரு மாசி மாதத்தில் யமுனை ஆற்றுக்கு வந்த பிரஜாபதி, வேதவல்லி தம்பதியினர் தாமரை மீதுள்ள வலம்புரிச் சங்கினை கண்டெடுத்தனர். வலம்புரிச் சங்கினை எடுத்ததும் பெண் குழந்தையாக மாறிற்று. சிவபெருமானின் வரத்தினால் பார்வதிதேவியே பெண் குழந்தையாக பிறந்துள்ளார் என்று அறிந்து கொண்ட வேதவல்லி அக்குழந்தையை தாட்சாயிணி என்று பெயரிட்டு வளர்த்து வந்தார். பார்வதிதேவி மாசி மக நட்சத்திரத்தில் பிறந்ததால் மாசி மகம் மேலும் பெருமை கொள்கிறது.

Comments