Angapradakshinam – How to Do in Temple?

How to do Angapradakshinam?

கோவிலில் இடமிருந்து வலமாக மட்டுமே பிரதட்சிணம் செய்யவேண்டும். உலகில் உள்ள கோவில்களில் இந்துக்களுக்கான கோவில்களும் அதிக சிறப்புடையது.

அதிலும் அங்கப்பிரதிட்சணம் முறை தமிழ்நாட்டில் மட்டுமே பெரும்பாலும் பின்பற்றப்பட்டு வருகிறது. பொதுவாக கோவிலில் வலம் வரும்போதும் சரி பிரதிட்சணம் செய்வதனாலும் சரி, இடமிருந்து வலமாகத்தான் வரவேண்டும்.

இவ்வாறு பிரதட்சிணம் செய்து வணங்குவது என்பது இயற்கையோடு இணைந்தது. நாம் வாழுகின்ற பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்ளும்போதும் சரி, நீள்வட்டப் பாதையில் சூரியனைச் சுற்றி வரும்போதும் சரி இடமிருந்து வலமாகவே சுற்றுகிறது.


Angapradakshinam

இயற்கையின் இந்த தத்துவத்தின் அடிப்படையில்தான் நாமும் இடமிருந்து வலமாக சுற்றிவந்து தெய்வங்களை வணங்குகிறோம். நம் வாழ்க்கைச் சக்கரம் சுழல்வதற்கு, கடவுள் என்ற ஒரு புள்ளி வேண்டும். அதை மையமாக வைத்தே நம் வாழ்க்கை இயங்குகிறது.

நம் தினசரி செயலின் ஆதாரமும், பணிகளின் மையமும் தெய்வமே என்பதை உணர்த்தத்தான், கடவுளை மையமாக வைத்து, நாம் ஆலயங்களில் சந்நிதியைச் சுற்றி வருகிறோம்.

ஆகவே எந்தக் காலத்திலும், எந்த சூழலிலும் இந்த பூமியில் வசிப்பவர்கள் இடமிருந்து வலமாகத்தான் சுற்றி வணங்க வேண்டுமே தவிர, வலமிருந்து இடமாகச் சுற்றி வணங்குதல் என்பது தவறு மட்டுமல்ல, இயற்கை நியதிகளுக்கு மாறானது.

Comments