Sabarimala Temple History in Tamil / சபரிமலை ஐயப்பன் கோவில் வரலாறு
கேரள மாநிலத்தில் மேற்கு தொடர்ச்சி மலை தொகுப்புகளில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் கோவில் கிட்டதட்ட 468 மீட்டர், (1535 அடி) உயரத்தில் உள்ளது. சுவாமி சிலை - புராதன காலத்தில் ஒன்பது விதமான பாஷானங்களை கொண்டு உருவாக்கப்பட்ட நவ பாஷான சிலையாயிருந்தது எனவும் மரதகக்கல் கொண்டு செய்யப்பட்ட சிலை எனவும் இரு வேறு கருத்துகள் உள்ளன.
Ayyappa Fasting Rules / ஐயப்ப விரத விதிமுறைகள்
- ஐயப்ப பக்தர்கள் கருப்பு மற்றும் நீல நிற உடை அணிவார்கள்.இது பழங்கால வாழ்வியலையும், படை அமைப்பு மற்றும் யோக கலையின் தொடர்பையும் உள்ளடக்கியதாக உள்ளது.
- ஐயப்ப பக்தர்கள் தங்களது ஆராதனைக்கு தேவையான பொருட்களை ஒரு முடியிலும் தங்களுடைய வேண்டுதல்களை ஒரு முடியிலும் வைத்து இருமுடி யாக தலையில் சுமந்து கொண்டு செல்கின்றனர்.
- சபரிமலை செல்வதற்கு முன் துளசி மற்றும் ருத்ராட்ச மாலை அணிவார்கள். அது ஆன்மீகம் மட்டுமல்லாமல் மருத்துவத்தையும் கொண்டுள்ளது.
- சபரி மலைக்கு கொண்டு செல்ல வேண்டிய நெய் - தேங்காய்யில் அடைக்கப்பட்டு, அதன் கண் அடைத்து, பல நாட்கள் சுமந்து சென்று நவ பாஷான சிலையில் அபிஷேகம் செய்து எடுத்து வரப்பட்டு பத்தியத்துடன் உட்கொள்ளப்படுகிறது.
- ஐயப்ப பக்தர்கள் இறுதியாக செய்யும் தரிசனம், மகர ஜோதி தரிசனம். வான்னம்பல மேட்டில் ஏற்றப்படும் மகர ஜோதி விளக்கை தரிசிப்பவர்களுக்கு ஜோதி வடிவில் வந்த ஐயப்பன் சுவாமியை தரிசித்து ஆசி பெற்றதாக அர்த்தம்.
Ayyappan Birth Story in Tamil / ஐயப்பன் பிறந்த கதை
பிரம்மாசுரனை அழிக்க மோகினி அவதாரம் எடுத்த விஷ்ணுவை கண்டு சிவபெருமான் மோகம் கொண்டார், இதன் விளைவாக தான் ஐயப்பன் அவதாரம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. குழந்தையாக பிறந்த ஐயப்பனை மரத்திற்கு அடியில் விட்டுவிட்டு சென்று விட்டனர் ஹரியும், விஷ்ணுவும்.தெய்வ செயல்கள் அனைத்திற்குமே ஒரு காரணம் உண்டல்லவா? பக்திமானான பந்தள மகாரஜாவின் பிள்ளையில்லா குறையைத் தீர்க்கவே பரந்தாமனும், பரம்பொருளும் குழந்தையை அங்கேவிட்டுச் சென்றனர். வேட்டைக்கு வந்த பந்தள மன்னன், குழந்தையின் அழுகுரல் கேட்டு எங்கு குழந்தை அழுகிறது என பதைபதைத்துத் தேடி மரத்தடியில் ஜொலிக்கும் குழந்தை ஐயப்பனைக் கண்டான். ஆண்டாவா! என் குழந்தையில்லா குறை தீர்க்கவே இந்த குழந்தை இங்கு இருக்கிறதா என மகிழ்ந்து அந்தக் குழந்தையை அரண்மனைக்குக் கொண்டு சென்றான்.
அரசியும் மட்டிலா மகிழ்ச்சி அடைந்தாள். இருவரும் இறைவனுக்கு நன்றி செலுத்தினர். குழந்தையை கண்ட அனைவரும் சொக்கிப் போனார்கள். ஜோதிடர்கள் இந்தக் குழந்தை தெய்வாம்சம் பொருந்திய குழந்தை எனக் கூறினர். கழுத்தில் மணியுடன் பிறந்ததால், குழந்தைக்கு மணிகண்டன் என பெயரிட்டு அன்போடு பாராட்டி சீராட்டி வளர்த்து வந்தனர்.
இந்நிலையில் மகாராணிக்கும் ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அரசனும் அரசியும் அடைந்த ஆனந்தத்திற்கு அளவில்லை. மணிகண்டன் வந்த நேரம் நமக்கும் குழந்தை பிறந்தது என ஆனந்தம் அடைந்தனர்.
ஆனால் எங்குமே நல் மனதைக் கெடுக்கும் ஒருசில புல்லுருவிகள் இருக்குமல்லவா? ஐயப்பன் உங்களுக்கு பிறந்த மகனல்ல, ஆனால் அவனையே தலைப்பிள்ளை போல் சீராட்டி வளர்க்கிறீர்கள். அதனால் அடுத்த மன்னனாக அவன் வரவே வாய்ப்பிருக்கிறது. உங்களுக்கு பிறந்த குழந்தையிருக்க வேறுயாரோ எப்படி அரசனாவது என அரசியின் மனதில் நஞ்சைக் கலந்தனர் சிலர்.
தீயபோதனைகளால் அரசியும் மனம் மாறினாள். தான் வயிற்று வலியால் அவதிப்படுவதாக பொய்யுரைத்தாள். அரசவை வைத்தியரை புலிப்பால் குடித்தால் மட்டுமே தன் வயிற்று வலி தீரும் எனக் கூற வைத்தாள்.
ஐயப்பன் அறிய மாட்டானா உண்மையை?! தாய்க்கு புலிப்பால் கொண்டு வர காடு நோக்கி புறப்பட்டான். வழியில் அரக்கி மகிஷி ஐயப்பனைத் தடுததாள். வில்லெடுத்தான் வில்லாளி வீரன். வதம் செய்தான் மகிஷியை.
அவன் அவதார மகிமை பூர்த்தி பெற்றது. தேவர்கள் பூமாரி பொழிந்தனர். இந்திரனே புலியாக மாற, மற்ற தேவர்கள் புலியாக புடை சூழ புலிமேல் ஏறி நாடு சென்றான் ஐயப்பன்.
புலிமேல் வந்த மணிகண்டனைக் கண்டு பதறிப் போனாள் அரசி. தான் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டு புலிகளை திருப்பி அனுப்புமாறு வேண்டினாள். ஐயப்பனும் அவ்வாறே செய்து அருளினார்.
மேலும் தன் அவதார காரணம் பூர்த்தி பெற்றதால், தான் சபரிமலையில் தவமிருக்கப் போவதாகவும் தன்னை தரிசிக்க வேண்டுமானால் அங்குவருமாறும் கூறி சபரி மலையில் 18 படிகளுக்கு மேல் தவக் கோலத்தில் அமர்ந்தார் அருள்தரும் ஐயப்பன்.
Ayyappa 18 Steps Meaning in Tamil / ஐயப்பன் 18 படி விளக்கம்
- முதல் படி பிறப்பு நிலையற்றது
- இரண்டாம் படி சாங்கிய யோகம்
- மூன்றாம் படி கர்ம யோகம்
- நான்காம் படி ஞான யோகம்
- ஐந்தாம் படி சன்னியாசி யோகம்
- ஆறாம் படி தியான யோகம்
- ஏழாம் படி ஞான விஞ்ஞான யோகம்
- எட்டாம் படி அட்சர பிரம்ம யோகம்
- ஒன்பதாம் படி ராஜவித்யா ராஜகுஹ்ய யோகம்
- பத்தாம் படி விபூதி யோகம்
- பதினொன்றாம் படி விஸ்வரூப தரிசன யோகம்
- பன்னிரெண்டாம் படி பக்தி யோகம்
- பதிமூன்றாம் படி சேஷத்ர விபாக யோகம்
- பதினான்காம் படி குணத்ரய விபாக யோகம்
- பதினைந்தாம் படி புருஷோத்தம யோகம்
- பதினாறாம் படி தைவாசுரஸம்பத் விபாக யோகம்
- பதினேழாம் படி ச்ராத்தாதரய விபாக போகும்
- பதினெட்டாம் படி மோட்ச சன்னியாச யோகம்
Why Ayyappan Legs are Tied / ஏன் ஐயப்பனின் இரு கால்களில் துண்டு கட்டப்பட்டிருக்கிறது?
ஐயப்பனின் இரு கால்களிலும் துண்டு கட்டப்பட்டு அவர் தவக் கோலத்தில் இருப்பதைக் காணலாம். அதற்கும் ஒரு காரணம் கூறப்படுகிறது.ஐயப்பனைக் காண ஒரு முறை பந்தள மகாரஜா வந்த போது ஐயப்பன் தன் தந்தை என்ற காரணத்தால் எழ முயன்றார்; இறைவன் தனக்கு மரியாதை செய்ய எழுந்திருக்கக் கூடாது என்பதற்காகத் தன் தோளில் போட்டிருந்த பட்டு அங்கவஸ்திரத்தை - ஐயப்பனை நோக்கி தூக்கி போட்டார். அந்த அங்கவஸ்திரம் ஐயப்பன் காலைச் சுற்றிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. உற்று நோக்கினால் ஐயப்பன் அமர்ந்த கோலத்திலிருந்து சற்றே எழுந்திருப்பது போல் தோன்றும் என்றும் கூறுகிறார்கள்.
Sabarimala Ayyappa Temple Timings
Sabarimala Temple usual Opening Timing is 3:00 am and closing Time is 1:00 pm. During Pilgrim season, Temple opens at 3:00 am and closes at 11:00 pm.மற்ற கோவில்கள் போல் சபரிமலை ஐயப்பன் கோவில் வருடம் முழுவதும் திறந்திருக்கப்பட்டிருப்பதில்லை. ஒவ்வொரு மலையாள மாதத்தின் கடைசி நாள் மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு மலையாள மாதத்தின் 5-வது நாளன்று நடை சார்த்தப்படும். ஆண்டு தோறும் நடைபெறும் மண்டல பூஜை, மகர ஜோதி பூஜைகள் விசேஷமானவை.
Sabarimala Ayyappa Temple Address
Sabarimala Ayyappa Temple,Perunad grama panchayat,
Pathanamthitta District,
Kerala, India – 689662
Comments
Post a Comment