Benefits of Pachai Karpooram (Karpuram), Green Camphor in Tamil

Pachai Karpooram Benefits

செல்வ செழிப்பை அள்ளித்தரும் பச்சை கற்பூரம்

🌸 பச்சைக் கற்பூரத்திற்கு செல்வத்தை ஈர்க்கும் தன்மை அதிகளாவில் உண்டு. ஒரு மஞ்சள் துணியில் பச்சை கற்பூரத்தை முடிச்சாக கட்டி குபேர மூலையில் வைத்து தூபம் காண்பித்து வழிபட்டு வந்தாலே வீட்டில் பணம் எப்பொழுதும் இருந்து வரும்.

🌸 பச்சை கற்பூரம் இயல்பாகவே அதிக வாசனை நிறைந்தது. பச்சை கற்பூரத்தின் வாசனைக்கு பெரிய சக்தி இருக்கிறது. 2 அல்லது 4 துண்டு பச்சை கற்பூரத்தை பூஜை அறையில் வைத்து வழிபடுங்கள். இதனை பூஜை அறையில் வைப்பதால் வீட்டில் எப்போதும் நிம்மதி இருக்கும். நமக்கு நிம்மதி இல்லாமல் போக காரணமே வீட்டில் இருக்க கூடிய துர்சக்திகள் தான்.

pachai karpooram

Pachai Karpooram Palangal in Tamil

🌸 பச்சை கற்பூரத்தின் வாசனையினாலும், அதன் மகிமையினாலும் வீட்டில் இருக்க கூடிய துர்சக்தியானது வீட்டை விட்டு வெளியே போய் விடும். அதனால் வீட்டில் எப்போதும் நிம்மதி இருக்கும். அதுமட்டுமல்லாது பச்சை கற்பூரத்திற்கு பணத்தினை ஈர்க்கும் தன்மை இருக்கிறதினால் வீட்டில் பணத்திற்கு கஷ்டம் இல்லாமல்வீட்டில் பணம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும்.

🌸 வீண் செலவுகள் இருக்காது. இந்த கற்பூரத்தினை பணம் இருக்கும் இடத்தில் வைக்கும் போது, அங்கு வரும் எதிர்மறையான வாசங்களையும், சக்திகளையும் இது தடுத்து நிறுத்தும்.

🌸 2 பச்சை கற்பூரத் துண்டை ஒரு பேப்பரில் வைத்து மடித்து உங்களது பர்சில் வைத்திருந்தால் பர்சில் பணம் குறையாது எப்பொழுதும் இருக்கும். தொழில் விருத்தியடைய, செல்வம் பெருக பணம் புழங்கும் இடமான பணப்பெட்டி மற்றும் பீரோ போன்ற இடங்களில் இந்த பச்சை கற்பூரத்தை ஒரு டப்பாவில் போட்டு வைக்கலாம்.

🌸 வீட்டில் நடைபெறக்கூடிய எல்லா சுப நிகழ்ச்சிகளிலும் பச்சை கற்பூரத்தை இடம் பெற செய்வது நல்லது. பச்சை கற்பூரத்தை எடுத்து குலதெய்வத்தையும், இஷ்டதெய்வங்களையும் மனதார வணங்கி நமக்கு வேண்டியவற்றை நினைத்து பிரார்த்தனை செய்து அந்த பச்சை கற்பூரத்தை டப்பாவில் போட்டு வைத்துவிட வேண்டும்.

🌸 இப்படி செய்வதால் நம் வாழ்வில் நல்லதொரு மாற்றம் ஏற்படும். நம் வீட்டில் உள்ள துர்சக்திகள், கெட்ட சக்திகள், கண்திருஷ்டி, எதிர்மறை ஆற்றல் அனைத்தும் விலகி செல்வ செழிப்பான வாழ்க்கை அமையும். வாசனை மிகுந்த இடங்களில் மகாலட்சுமி குடிகொள்வாள். ஆதலால் பணம் புழங்கும் இடங்களில் வாசனை மிக்க பச்சை கற்பூரமானது இருந்தால் செல்வம் செழிக்கும்.

Comments