Sri Venkatesa Karavalamba Stotram in Tamil

Sri Venkatesa Karavalambam

Sri Venkatesa Karavalambam

ஶ்ரீசேஷஶைல ஸுனிகேதன தி³வ்யமூர்தே!
நாராயணாச்யுத ஹரே! நளிநாயதாக்ஷ ।
லீலாகடாக்ஷ! பரிரக்ஷித ஸர்வலோக!
ஶ்ரீ வேங்கடேஶ! மம தே³ஹி கராவலம்ப³ம் ॥ 1॥

சேஷாசலத்தில் எழுந்தருளியிருக்கும் திவ்யமூர்த்தியே, நாராயணா, அச்சுதா, ஹரியே உன்னை வணங்குகின்றேன். அனைத்து உலகத்தையும் விளயாட்டாகவே காத்தருளும் வேங்கடேசனே! எனக்கு உதவிட உன் திருக்கரத்தை அளிப்பாயாக.

ப்³ரஹ்மாதி³வந்தி³தபதா³ம்பு³ஜ ஶங்க²பாணே
ஶ்ரீமத் ஸுத³ர்ஶன ஸுஶோபி⁴த தி³வ்யஹஸ்த ।
காருண்ய ஸாக³ர ஶரண்ய ஸுபுண்ய மூர்தே!
ஶ்ரீ வேங்கடேஶ மம தே³ஹி கராவலம்ப³ம் ॥ 2॥

பிரம்மா முதலியவர்களால் வணங்கப்படும் பாதத் தாமரைகளையுடைய சங்கு பாணியே. கையில் அழகான ஒளிவிடும் சுதர்சன் சக்கரத்தை ஏந்தியவரே, கருணைக் கடலென விளங்குபவரே, சரணடைவோரின் புண்ணிய மூர்த்தியே, ஸ்ரீ வேங்கடேசனே, உமது நேசக்கரத்தை எனக்காக நீட்டியருள்வாயாக.

வேதா³ந்த-வேத்³ய ப⁴வஸாக³ர கர்ணதா⁴ர
ஶ்ரீபத்³மநாப⁴ கமலார்சித பாத³பத்³ம ।
லோகைக பாவன பராத்பர பாபஹாரின்
ஶ்ரீ வேங்கடேஶ மம தே³ஹி கராவலம்ப³ம் ॥ 3॥

oவேத வேதாந்தங்களாலும் ஆராய்ந்து அறிய முற்படும் லட்சிய முன்னோடியே, தாமரையில் வீற்றிருப்பவளால் பூஜிக்கப்படும் பாதத் தாமரைகளையுடைய பத்மநாபரே, உலகத்தையே காக்கும் பராத்பரரே, பாபஹாரியே, பாவங்களை அழிப்பவரே, ஸ்ரீ வேங்கடேசனே உம்முடைய அபயகரத்தை எனக்காக நீட்டுங்கள்.

லக்ஷ்மீபதே நிக³மலக்ஷ்ய நிஜஸ்வரூப
காமாதி³தோ³ஷ பரிஹாரக! போ³த⁴தா³யின் ।
தை³த்யாதி³மர்த³ன ஜனார்த³ன வாஸுதே³வ
ஶ்ரீ வேங்கடேஶ மம தே³ஹி கராவலம்ப³ம் ॥ 4॥

oமகாலட்சுமியின் நாயகரே, வேதங்கள் தேடும் பரம் பொருளே, காமம் போன்ற குரோதங்களை விலக்கியருளும் ஞானவடிவானவரே, அசுரகுலத்தைப் பூண்டோடு அழித்த ஜனார்த்தனா, தர்மத்தை காக்க அதர்மத்தை விளையாட்டாகவே அழிப்பவரே, வாசுதேவனே, எங்கும் உறைந்து விளையாட்டாகவே அனைவரையும் காப்பவரே, ஸ்ரீவேங்கடேசனே. உமது உதவும் கரங்களை எனக்காக நீட்டுங்கள்.

தாபத்ரயம் ஹர விபோ⁴ ரப⁴ஸா முராரே
ஸம்ரக்ஷ மாம் கருணயா ஸரஸீருஹாக்ஷ ।
மச்சி²ஷ்ய இத்யனுதி³னம் பரிரக்ஷ விஷ்ணோ
ஶ்ரீ வேங்கடேஶ மம தே³ஹி கராவலம்ப³ம் ॥ 5॥

oஅத்யாத்மிகம், ஆதிதைவதம், ஆதிமௌத்திகம் என்கிற மூன்று தாபங்களையும், வன்முறைகளையும் அழித்த முராரியே. தாமரைக் கண்ணாளரே. உம் அபார கருணையால் என்னைக் காப்பாற்றும், தரையில் விழுந்த மீன்களைப் போன்ற எம்மைக் காத்திட விஷ்ணுவாகிய, எல்லாவற்றிலும் அந்தர்யாமியாக இருப்பவரே, ஸ்ரீவேங்கடேசனே உம்முடைய நேசக்கரத்தை நீட்டுங்கள்.

ஶ்ரீ ஜாதரூப நவரத்ன லஸத்கிரீட!
கஸ்தூரிகா திலக ஶோபி⁴ லலாடதே³ஶ ।
ராகேந்து³ பி³ம்ப³ வத³நாம்பு³ஜ வாரிஜாக்ஷ!
ஶ்ரீ வேங்கடேஶ மம தே³ஹி கராவலம்ப³ம் ॥ 6॥

oநவரத்தினங்கள் அலங்கரிக்கும் ஒளிமயமான முகமுடையவனே, நெற்றிப் பகுதியில் கஸ்தூரி திலகம் தரித்து, பல வண்ணத் தாமரைகள் ஒருங்கிணைந்தாற் போன்ற முகாரவிந்தமுடைய வேங்கடேசனே, உம்முடைய அருட்கரத்தை நீட்டுங்கள்.

வந்தா³ரு லோக வரதா³ன வசோ விலாஸ!
ரத்னாட்⁴ய ஹார பரிஶோபி⁴த கம்பு³கண்ட² ।
கேயூரரத்ன ஸுவிபா⁴ஸி தி³க³ந்தராள
ஶ்ரீ வேங்கடேஶ மம தே³ஹி கராவலம்ப³ம் ॥ 7॥

oசரணடைந்த உலகத்தார் கோரும் வரங்களை விளையாட்டாகவே நிறைவேற்றுபவரும், கழுத்துப் பிரதேசத்தில் அணிந்திட்ட நவரத்னங்களிழைத்த ஆபரணங்களால் ஒளிர் பவரும், திக்கெல்லாம் ஒளிபரப்பும் ரத்னவங்கிகளை தோள் வளைகளாக அணிந்து உள்ளவருமான வேங்கடேசனே. உமது உதவும் கரங்களை எனக்காக நீட்டுங்கள்.

தி³வ்யாங்க³தா³ஞ்சித பு⁴ஜத்³வய மங்க³ளாத்மன்!
கேயூரபூ⁴ஷித ஸுஶோபி⁴த தீ³ர்க்க⁴ பா³ஹோ ।
நாகே³ந்த்³ர கங்கண கரத்³வய காமதா³யின்
ஶ்ரீ வேங்கடேஶ மம தே³ஹி கராவலம்ப³ம் ॥ 8॥

oசுந்தரமான அங்கங்களுடன் நீண்ட இரு கரங்களுடன் திகழ்பவரே. தோளில் ரத்ன வளைகள் விகசிக்க, பாம்பணி வளையங்கள் கைகளில் ஒளிவீசிட விளங்குபவரே, சரண்டைந்தோரின் ஆசைகளை நிறைவேற்றும் வேங்கடேசனே, உமது நேசக்கரங்களை எனக்காக நீட்டுங்கள்.

ஸ்வாமின் ஜக³த்³த⁴ரணவாரிதி⁴ மத்⁴ய மக்³னம்
மாமுத்³தா⁴ராத்ய க்ருபயா கருணா பயோதே⁴ ।
லக்ஷ்மீம்ஶ்ச தே³ஹி விபுலாம் ருணவாரணாய
ஶ்ரீ வேங்கடேஶ! மம தே³ஹி கராவலம்ப³ம் ॥ 9॥

oசம்சாரமாகிய ஆழ்கடலில் நடுவில் சிக்கிச் சுழன்று அவதிக்குள்ளாயிருக்கும் உலக உயிர்களை உய்விக்கும் ஜனார்த்தனரே, என்னை உய்விக்க வாருங்கள். தீராத ருணத்தினால் கடன் தொல்லையால் அவதிப்படும் எனக்கு லட்சுமி தேவியை அளியுங்கள். பெரிய யானை கஜேந்திரனைக் காக்க ஓடோடி வந்தவனே, வேங்கடேசனே. உமது உதவிக் கரங்களை நீட்டி எனக்கு உதவுங்கள்.

தி³வ்யாங்க³ராக³பரிசர்சித கோமளாங்க³
பீதாம்ப³ராவ்ருத தனோ! தருணார்கபா⁴ஸ
ஸத்காஞ்சனாப⁴ பரிகட்டன ஸுபட்டப³ந்த⁴!
ஶ்ரீ வேங்கடேஶ மம தே³ஹி கராவலம்ப³ம் ॥ 10॥

oதிவ்வியமான பல வண்ணங்களிலான அங்கிகளும், மஞ்சள் பட்டாடைகளும் மற்றும் தங்க மயமான பட்டு மேல் வஸ்திரங்களாலும், சுற்றிச் சுழலும் மேலங்கிகளாலும் கோமள ரங்கனாக, அழகோவியமாக காணப்படும் வேங்கடேசனே. எனக்காக உமது உதவும் கரங்களை நீட்டியருளுங்கள்.

ரத்னாட்⁴யதா³ம ஸுனிப³த்³த⁴-கடி-ப்ரதே³ஶ
மாணிக்ய த³ர்பண ஸுஸன்னிப⁴ ஜானுதே³ஶ ।
ஜங்கா⁴த்³வயேன பரிமோஹித ஸர்வலோக
ஶ்ரீ வேங்கடேஶ மம தே³ஹி கராவலம்ப³ம் ॥ 11॥

oஇடுப்புப் பிரதேசத்தில் அழகாகக் கட்டப்பட்டுள்ள ரத்னமயமான ஆபரணங்கள், முழங்கால் பகுதியில் மாணிக்கங்களும் கண்ணாடி கற்களுமிழைத்த அங்கிகள், கணுக்காலிலும் முழங்காலிலும் மனதைக்கவரும் அலங்காரம் என எழிலுடன் விளங்கும் வேங்கடேசனே, உம் அபயக்கரத்தை எனக்காக அளியுங்கள்.

லோகைகபாவன லஸரித் பரிஶோபி⁴தாங்க்⁴ரே
த்வத்பாத³ த³ர்ஶன தி³னேச மவாபமீஶ ।
ஹார்த³ம் தமஶ்ச ஸகலம் லயமாப பூ⁴மன்
ஶ்ரீ வேங்கடேஶ மம தே³ஹி கராவலம்ப³ம் ॥ 12॥

oஉலகையே புனிதமாக்கக்கூடிய ஆற்றல் நீயே, தினமும் உன்னைத் தரிசித்து மகா பிரசாதங்களைப் பெற்றுச் செல்லும் பக்தர்களின் இருள் அகல்வதுடன் பூமியெங்கும் அருள்வெள்ளம் பெருக்கெடுக்கும்படியும் செய்யும், உனது மகாபிரசாதங்கள் உலகையே உய்விக்கக் கூடியவை, வேங்கடேசனே, உனது உதவும் கரத்தை நீட்டியருள்வாயாக.

காமாதி³ வைரி நிவஹோச்யுத! மே ப்ரயாத:
தா³ரித்³ர்ய மப்யபக³தம் ஸகலம் த³யாளோ ।
தீ³னஞ்ச மாம் ஸமவலோக்ய த³யார்த்³ர த்³ருஷ்ட்யா
ஶ்ரீ வேங்கடேஶ மம தே³ஹி கராவலம்ப³ம் ॥ 13॥

oகாமம் போன்ற ஏராளமான எதிரிகள் எனக்கு முன்னே இருந்தாலும் உன்னுடைய கருணாகடாட்சத்தினால் அவையனைத்தும் ஏழையேனாகிய என்னை பாதிக்காமலிருக்க வேங்கடேசனாகிய நீரே எனக்காக உமது உதவும் கரங்களை நீட்டி அருள்வீராக.

ஶ்ரீ வேங்கடேஶ பத³பங்கஜ ஷட்பதே³ன
ஶ்ரீமன் ந்ருஸிம்ஹ யதினா ரசிதம் ஜக³த்யாம் ।
ஏதத் பட²ந்தி மனுஜா: புருஷோத்தமஸ்ய
தே ப்ராப்னுவந்தி பரமாம் பத³வீம் முராரே: ॥ 14॥

oஸ்ரீமன் நரசிம்ம முனி என்கிற யதிகளால் ஸ்ரீ வேங்கடேசனின் பாதங்களில் சமர்ப்பிக்கப்பட்ட இந்த துதிகளை மனம் ஒன்றிப் படிக்கும் ஒவ்வொருவரும், அந்த புருஷோத்தமனின் அருள் பெற்று அனைத்தையும் அடைவர்.

॥ இதி ஶ்ரீ ஶ்ருங்கே³ரி ஜக³த்³கு³ருணா ஶ்ரீ ந்ருஸிம்ஹ பா⁴ரதி
ஸ்வாமினா ரசிதம் ஶ்ரீ வேங்கடேஶ கராவலம்ப³ ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம் ॥

Comments